Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் இன்றும் உயர்வு!

பங்குச் சந்தைகளில் இன்றும் உயர்வு!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:53 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலை 10.13 மணியளவில் நிஃப்டி 126.30, சென்செக்ஸ் 449.51 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், கடந்த பதினைந்து தினங்களாக இருந்த நிலைமை மாறியது. இதே போல் ஆசிய பங்குச் சந்தைகளிலும் நேற்றும், இன்றும் முன்னேற்றம் காணப்பட்டது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 936.42, நாஸ்டாக் 194.74 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-324.84 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 129.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3620.30 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 481.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 11,790.84 ஆக அதிகரித்தது.

இதே போல் மிட் கேப் 171.75, சுமால் கேப் 215.30, பி.எஸ்.இ. 500- 183.52 புள்ளிகள் அதிகரித்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 715.67, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 131.63, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 69.46, ஜப்பானின் நிக்கி 1,127.24, சீனாவின் சாங்காய் காம்போசிட் 25.09 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.43 மணியளவில் 1,620 பங்குகளின் விலை அதிகரித்தும், 403 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 35 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 1,060.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 582.31 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இன்றபங்குசசந்தைகளிலகாலையிலவர்த்தகமதொடங்குமபோதஎல்லபிரிவகுறியீட்டஎண்களுமஅதிகரித்தன. மத்திஅரசு, ரிசர்வவங்கி எடுத்துள்நடவடிக்கைகளாலபங்குச் சந்தையிலஎவ்விபாதிப்புமஇருக்காது.


Share this Story:

Follow Webdunia tamil