மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது.
கடந்த வாரம் முழுவதும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.48.07 பைசாவாக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.48.45.
அந்நியச் செலாவணி சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. காலையில் இருந்த நிலை மாறி, பிறகு 1 டாலர் ரூ. 48.32 என்ற அளவில் விற்பனை ஆனது.
பொதுத்துறை வங்கி டாலரை அதிக அளவு விற்பனை செய்தன. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.