மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.255ம், பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.510 அதிகரித்தது.
அயல் நாடுகளில் இருந்து வந்த தகவல்களாலும், நகை தயாரிப்பவர்கள் அதிக அளவு தங்கம் வாங்க ஆர்வம் காண்பித்ததால். இவற்றின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 900 டாலருக்கும் மேல் தாண்டியது.
1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 929/930.50 ஆக உயர்ந்தது. (முன் தினம் விலை 910.00/911.50)
இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 12.28 /12.29 டாலராக அதிகரித்தது. (முந்தைய நாள் விலை விலை 11.82/11.83 டாலர்).
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.14,145
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.14,075
பார் வெள்ளி கிலோ: ரூ.20,680.