Newsworld Finance Market 0810 08 1081008013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Advertiesment
பங்குச் சந்தைகளில் கடும் சரிவு
, புதன், 8 அக்டோபர் 2008 (17:19 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.

காலை 10.10 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 59.85 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3,408.50 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தை‌யி‌ல் வ‌ர்‌த்தக‌ம் தொட‌‌ங்‌கிய முத‌ல் ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ல் சென்செக்ஸ் 663 புள்ளிகளசரிந்து 11,015 இருந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதால் பங்குச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 663 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 11,015 ஆக இருந்தது.

நண்பகல் 12.13 மணியளவிலசென்செக்ஸமேலு‌ம் 912 புள்ளிகளசரிந்து 10,784 க குறை‌ந்தது.

பி‌ன்ன‌ரச‌ந்தை மெ‌ல்ல மெ‌ல்ல ச‌ரி‌வி‌லிரு‌ந்து ‌மீள‌த் துவ‌ங்‌கியதை அடு‌த்து இ‌‌ன்றைய வ‌ர்‌த்தக நேர இறு‌தி‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 366.88 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து கு‌றி‌யீ‌ட்டு எ‌ண் 11,328.36 ஆக‌க் குறை‌ந்தது.

இதே போல் மிட் கேப் 246.68, சுமால் கேப் 277.20, பி.எஸ்.இ. 500- 170.80 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி இ‌ன்றைய வ‌ர்‌த்தக நேர இறு‌தி‌யி‌ல் 93 புள்ளிகள் ச‌ரி‌ந்து குறியீட்டு எண் 3513.65 ஆக குறை‌ந்தது.

காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil