மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவைச் சந்தித்து வருகிறது. நண்பகல் 12.13 மணியளவில் சென்செக்ஸ் 912 புள்ளிகள் சரிந்து 10,784 ஆக இருந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கிய போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. முதல் ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிந்து 11,015 ஆக இருந்தது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 251 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3, 356 ஆக இருந்தது. இதேபோல் ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று பலத்த சரிவு நிலவி வருகிறது.
ஸ்டெர்லைட், சத்யம், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.