Newsworld Finance Market 0810 06 1081006076_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 725 – நிஃப்டி 216 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 6 அக்டோபர் 2008 (17:35 IST)
மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிதும் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 12 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 724.62 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 11,801.70 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 333.57, சுமால் கேப் 378.47, பி.எஸ்.இ 500- 292.79 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 215.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3602.35 ஆக சரிந்தது.

ரியல் எஸ்டேட் 9.91%, உலோக உற்பத்தி பிரிவு 9.91% , நுகர்வோர் பொருட்கள் 7.27%, மின் உற்பத்தி 7.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 6.14%, தகவல் தொழில் நுட்பம் 5.82%, வங்கி 4.00% ,தொழில் நுட்பம் 5.62%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.90%, வாகன உற்பத்தி 3.50% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 281 பங்குகளின் விலை அதிகரித்தது. 2369 பங்குகளின் விலை குறைந்தது. 27 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 47 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 44 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 19 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil