மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.30ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.160ம் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 838.00/838.50 ஆக இருந்தது 828.00/828.50 டாலர்களாக காணப்பட்டது.
இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.96/10.97 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.20/11.21டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,855
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,800
பார் வெள்ளி கிலோ: ரூ.19,325