Newsworld Finance Market 0810 01 1081001090_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 195 – நிஃப்டி 30 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி ஜீனியர் நிஃப்டி
, புதன், 1 அக்டோபர் 2008 (17:03 IST)
மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள், காலை 11 மணி அளவில் அதிகரிக்க ஆரம்பித்தன. நண்பகல் 12.30 அளவில் நேற்றைய இறுதி நிலையை விட அதிகரித்தது. ஆனால் மதியம் ஏற்ற இறக்கமாக இருந்தது.

பங்ககுச் சந்தைகளில் உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் 13 ஆயிரத்தை தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 195.24 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,055.67 ஆக உயர்ந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 25.97, சுமால் கேப் 29.33, பி.எஸ்.இ 500- 56.03 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 29.55 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3950.75 ஆக அதிகரித்தது.

ரியல் எஸ்டேட் 2.32%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.10% குறைந்தது. மற்ற பிரிவு அதிகரித்தன.

வங்கி 3.23%, தொழில் நுட்பம் 2.60%, தகவல் தொழில் நுட்பம் 3.97%, மின் உற்பத்தி 1.08%, நுகர்வோர் பொருட்கள் 0.11%,
பொதுத்துறை நிறுவனங்கள் 1.11%, உலோக உற்பத்தி பிரிவு 0.66% அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1475 பங்குகளின் விலை அதிகரித்தது. 1124 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 28 பங்குகளின் விலை அதிகரித்தது. 20 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 15 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 11 பங்குகளின் விலையும் அதிகரித்தது. 1 பங்கு விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மிட்கேப் 50 பிரிவில் உள்ள 49 பங்குகளில் 31 பங்குகளின் விலை அதிகரித்தது. 17 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil