Newsworld Finance Market 0809 30 1080930066_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 265– நிஃப்டி 71 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி ரியல் எஸ்டேட் ஹாங்காங் சீனா
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:30 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் நேற்று போலவே குறைந்தன. நண்பகல் 12.30 மணிக்கு பிறகு நிலைமை மாறியது.

பங்குச் சந்தைகளில் உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 264.68 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 12,860.43 ஆக உயர்ந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 68.96, சுமால் கேப் 24.44, பி.எஸ்.இ 500- 87.56 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 71.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3921.20 ஆக அதிகரித்தது.

வங்கி 4.92%, தொழில் நுட்பம் 1.98%, தகவல் தொழில் நுட்பம் 1.22%, ரியல் எஸ்டேட் 2.96%, மின் உற்பத்தி 1.58%, நுகர்வோர் பொருட்கள் 3.02%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.62%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.28% அதிகரித்தது. ஆனால் உலோக உற்பத்தி பிரிவு 1.66%, குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளில் சீனா, ஹாங்காங் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 135.53 புள்ளியும், சீனாவின் 180 பிரிவு-22.92 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளில் சில பங்குச் சந்தைகளில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது. மாலை 5.15 மணியளவில் பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-18.22 புள்ளி அதிகரித்து இருந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1277 பங்குகளின் விலை அதிகரித்தது. 1316 பங்குகளின் விலை குறைந்தது. 79 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 36 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 37 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மிட்கேப் 50 பிரிவில் உள்ள 49 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது

Share this Story:

Follow Webdunia tamil