Newsworld Finance Market 0809 25 1080925062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 145 – நிஃப்டி 51 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி வங்கி நிஃப்டி சிஎன்எக்ஸ் ஐடி ஜூனியர் நிஃப்டி
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:36 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. மதியம் 2.30 மணிக்கு பிறகு சிறிது அதிகரித்தது.
ஆனால் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 145.34 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,547.18 ஆக உயர்ந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 33.73, சுமால் கேப் 51.48 பி.எஸ்.இ 500- 51.70 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50.70 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4110.55 ஆக குறைந்தது.

தொழில் நுட்பம் பங்குகளின் விலை 2.01%, உலோக உற்பத்தி பிரிவு 1.63%, ரியல் எஸ்டேட் 1.96%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.49%, மின் உற்பத்தி பிரிவு 1.67%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.76% வங்கி 0.34% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 899 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,688 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 39 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜூனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது. 34 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது. 17 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மிட்கேப் 50 பிரிவில் உள்ள 49 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil