அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 8 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.45.95 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ரூ.46.03/05 ஆக சரிந்தது.
அயல்நாட்டு கடன்களை அடைக்கும் விடயத்தில் இந்திய நிறுவனங்கள் முனைப்புகாட்டி வருவதால் ஏற்பட்ட டாலர் தட்டுப்பாட்டின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக தெரிவித்த வர்த்தகர்கள், ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.46.03ல் இருந்து ரூ.46.26 ஆக சரிந்து காணப்பட்டது.