தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது, சென்செக்ஸ் 111 புள்ளியும், நிஃப்டி 21 புள்ளியும் அதிகரித்தது.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் டோவ்ஜோன்ஸ் 161.52, நாஸ்டாக் 25.65 புள்ளிகள் குறைந்தன. இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ-100.14 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் இருவிதமான நிலை இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 146.10, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.29, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 13.15 அதிகரித்தன.
அதே நேரத்தில் சீனாவின் சாங்காய் 180 பிரிவு 94.58, புள்ளிகள் குறைந்தது.
காலை 10.37 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4163.60 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 124.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,694.46 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 46.77, சுமால் கேப் 38.23, பி.எஸ்.இ. 500- 47.32 புள்ளி அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.40 மணியளவில் 1094 பங்குகளின் விலை அதிகரித்தும், 670 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 58 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 924.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 68.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்க அரசு அந்நாட்டில் பிணைய கடனால் நஷ்டமடைந்துள்ள நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அவசர நிதியாக 700 பில்லியன் டாலர் உதவி அளிக்க தீர்மானித்துள்ளது. இதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.