Publish Date: Tue, 23 Sep 2008 (12:43 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (12:42 IST)
கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்து ரூ.9,432 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒரு பவுனுக்கு ரூ.32 குறைந்து 9,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.9,432 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை 10 கிராமுக்கு ஆறு ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,720 (நேற்று ரூ.12,485)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,432 (ரூ.9,256)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,179 (ரூ.1,157)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,295 (நேற்று ரூ.19,705)
வெள்ளி 10 கிராம் ரூ.217 (ரூ.211)
வெள்ளி 1 கிராம் ரூ.21.7 (ரூ.21.1)
Webdunia
Publish Date: Tue, 23 Sep 2008 (12:43 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (12:42 IST)