மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை முதல் வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவு பங்கு விலைகளும் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் 14 ஆயிரத்திற்கும் குறைந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 47.36 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,994.96 ஆக குறைந்தது.
அதே போல் மிட் கேப் பிரிவு 07.82, சுமால் கேப் 21.88, பி.எஸ்.இ 500- 17.90 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4223.05 ஆக குறைந்தது.
தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 0.75%, உலோக உற்பத்தி பிரிவு 0.99%, ரியல் எஸ்டேட் 0.17%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.74%, மின் உற்பத்தி பிரிவு 1.62%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.74% வங்கி 0.11% குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,234 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,354 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் நிஃப்டி தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.