தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போlது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் இவை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருந்தது.
பங்குச் சந்தையில் காலை 9.55 மணியளவில் சென்செக்ஸ் 173 புள்ளிகளும், நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை 1,016.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 43.91 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்க அரசு, அந்நாட்டில் பிணைய கடனால் நஷ்டமடைந்துள்ள நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அவசர நிதியாக 700 பில்லியன் டாலர் உதவி அளிக்க தீர்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சனிக்கிழமையன்று கேட்டுள்ளது.
இத்துடன் இதுவரை முதலீட்டு நிறுவனங்களாக இருந்த கோல்ட்மென் சாஜி, மோர்கன் ஸ்டான்லி ஆகிய இரண்டு நிறுவனங்களையும், வங்கிகளாக அங்கீகரிக்க போகிறது.
இதன் மூலம் இந்த இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் வரும். இதனால் இவைகளுக்கு ரிசர்வ் வங்கியின் கடன் போன்ற சலுகைகள் கிடைக்கும்.
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகளால் வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. டோவ்ஜோன்ஸ் 368.75, நாஸ்டாக் 74.80, எஸ் அண்ட் பி 500- 48.57 புள்ளிகள் அதிகரித்தன. இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் அதிகரித்து இருந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவியது.
ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 266.58, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 13.27, ஜப்பானின் நிக்கி 236.78, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 1.02, சீனாவின் சாங்காய் 180 பிரிவு 280.14 புள்ளிகள் அதிகரித்தன. மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.
காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4255.65 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 40.39 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,082.71 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 36.80, சுமால் கேப் 36.06, பி.எஸ்.இ. 500- 28.60 புள்ளி அதிகரித்தது.
வெள்ளிக் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கணிசமான பங்குககளை வாங்கியுள்ளன. இவை இன்று விற்பனை செய்து இலாப கணக்கு பார்க்கும். இதனால் இன்று பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்பு உள்ளது. நண்பகலுக்கு மேல் நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.