மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை முதல் வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவு பங்கு விலைகளும் தொடர்ந்து அதிகரித்தன. கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த எதிர்மறை நிலை மாறியது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 14 ஆயிரத்தை தாண்டியது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 726.72 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,042.32 ஆக இருந்தது.
ஆனால் மிட் கேப் பிரிவு 149.65, சுமால் கேப் 140.56, பி.எஸ்.இ 500- 236.41 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 207.10 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 4245.25 ஆக உயர்ந்தது.
தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 6.67%, உலோக உற்பத்தி பிரிவு 3.55%, ரியல் எஸ்டேட் 7.59%, பொதுத்துறை நிறுவனங்கள் 4,56%, மின் உற்பத்தி பிரிவு 5.16%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.52% வங்கி 5.03% அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1888 பங்குகளின் விலை அதிகரித்தது. 740 பங்குகளின் விலை குறைந்தது. 72 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.