Newsworld Finance Market 0809 18 1080918065_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 53 – நிஃப்டி 26 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் 53 – நிஃப்டி 26 புள்ளி உயர்வு
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (17:02 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை முதல் மதியம் வரை பாதிப்பாக இருந்தது. மதியம் 2.30 மணிக்கு பிறகு நிலைமை சிறிது மாறியது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர், பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் 100, சி.என்.எக்ஸ் 500 பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 52.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,315.60 ஆக இருந்தது.

ஆனால் மிட் கேப் பிரிவு 60.50, சுமால் கேப் 139.32, பி.எஸ்.இ 500- 0.28 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.45 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4035.70 ஆக உயர்ந்தது.

தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 2.47%, உலோக உற்பத்தி பிரிவு 1.27%, ரியல் எஸ்டேட் 4.48%, குறைந்தது.

பொதுத்துறை நிறுவனங்கள் 0.11%, மின் உற்பத்தி பிரிவு 0.82%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.36% வங்கி 2.68% அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 676 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,944 பங்குகளின் விலை குறைந்தது. 70 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil