Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தையில் கடும் சரிவு!

பங்குச் சந்தையில் கடும் சரிவு!
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (11:42 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இன்றும் எல்லா பிரிவு குறீயிட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.

சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும், நிஃப்டி 4 ஆயிரத்திற்கும் குறைந்தது.

காலை 10.04 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 632.27 புள்ளிகள் குறைந்து (4.77%) குறியீட்டு எண் 12,630.53 ஆக குறைந்தது.

இதே போல் நிஃப்டி 170 புள்ளிகள் குறைந்து (4.24%), குறியீட்டு எண் 3,838.40 ஆக சரிந்தது.

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களான லெக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங், மெரில் லாஞ்ச் ஆகிய இரு நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. இதில் லெக்மான் நிறுவனம் திவாலா தா‌க்‌கீது கொடுத்தது. மெரில் லாஞ்ச் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, இதை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கியது.

அமெரிக்க இன்ஷ்யூரன்ஸ் குரூப் நிறுவனம் நஷ்டம் அடைவதை தடுக்க அமெரிக்க ரிசர்வ் வங்கி 85 பில்லியன் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா உட்பட மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. நிதிச் சந்தையில் பணப்புழக்கம் கடுமையாக பாதித்துள்ளது. எந்த நாட்டு ரிசர்வ் வங்கியும், மற்ற நாட்டு வங்கிகளுக்கு நிதி உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் அமெரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ததை திரும்ப பெறுகின்றனர். இவர்கள் மற்ற நாட்டு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

இந்நிய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. நேற்று மட்டும் 1,064.17 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து‌ள்ளன. கடந்த மூன்று நாட்களில் மொத்தம் ரூ. 3,130.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

காலை 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 565.01 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,697.89 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 151.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3856.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 247.72, பி.எஸ்.இ. 500- 224.46, சுமால் கேப் 313.11 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil