Publish Date: Wed, 17 Sep 2008 (16:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 256 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,262.90 ஆக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 66.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4006.25 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் 100 தவிர மற்ற பங்குகளின் விலைகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 77.62, சுமால் கேப் 74.66, பி.எஸ்.இ 500- 104.01 புள்ளி குறைந்தது.
தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 0.58%, உலோக உற்பத்தி பிரிவு 3.55%, மின் உற்பத்தி 1.70%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.84%, ரியல் எஸ்டேட் 4.13% வங்கி 3.79%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.81% குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 886 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,740 பங்குகளின் விலை குறைந்தது. 86 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
Webdunia
Publish Date: Wed, 17 Sep 2008 (16:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)