Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 470–நிஃப்டி 156 புள்ளி சரிவு!

சென்செக்ஸ் 470–நிஃப்டி 156 புள்ளி சரிவு!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:55 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்து கொண்டே வந்தது.

சென்செக்ஸ் 14 ஆயிரத்திற்கும் குறைந்தது. இதே போல் நிஃப்டியும் 4 ஆயிரத்திற்கும் குறைந்தது.

நண்பகல் 1.15 மணிக்கு பிறகு தேசிய பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருந்தது. இதனால் நிஃப்டி 4000 த்தை தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 469.54 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,531.27 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 155.55 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4072.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 248.55, சுமால் கேப் 331.07, பி.எஸ்.இ 500- 205.42 புள்ளி குறைந்தது.

தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 5.51%, உலோக உற்பத்தி பிரிவு 4,51%, பெட்ரோலிய நிறுவனங்கள் 3.31%, மின் உற்பத்தி 4.38%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.82%, ரியல் எஸ்டேட் 7.65% வங்கி 3.37% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 359 பங்குகளின் விலை அதிகரித்தது. 2263 பங்குகளின் விலை குறைந்தது. 40 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil