மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 238.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,662.61 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 68.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4400.25 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 69.27, சுமால் கேப் 61.19, பி.எஸ்.இ 100- 76.19 புள்ளி குறைந்தது.
உலோக உற்பத்தி பிரிவு பங்குகளின் விலை 5.48%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.18%, மின் உற்பத்தி 1.67%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.54%, ரியல் எஸ்டேட் 1.52% குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 931 பங்குகளின் விலை அதிகரித்தது. 1722 பங்குகளின் விலை குறைந்தது. 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 74.60, சி.என்.எக்ஸ். ஐ.டி 22.95, பாங்க் நிஃப்டி 13.60, சி.என்.எக்ஸ்.100- 62.15, சி.என்.எக்ஸ். டிப்டி 74.40, சி.என்.எக்ஸ் 500- 53.10, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 46.65, மிட் கேப் 50- 19.50 புள்ளி குறைந்தது.