Newsworld Finance Market 0809 09 1080909062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 44, நிஃப்டி 14 புள்ளிகள் சரிவு.

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி மும்பை
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:08 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. மதியம் 1 மணிக்கு பிறகு சிறிது அதிகரிக்க துவங்கியது. ஆனால் இறுதியில் நேற்றைய நிலவரத்தை கூட எட்டவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 44.21 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,900.76 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 13.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,468.70 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 41.69, சுமால் கேப் 18.15, பி.எஸ்.இ. 100- 26.14 புள்ளி குறைந்தது.

உலோக உற்பத்தி பிரிவு பங்குகளின் விலை 1.78%, வங்கி 1.28%, ரியல் எஸ்டேட் 1.16% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,195 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,443 பங்குகளின் விலை குறைந்தது, 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 68.65, பாங்க் நிஃப்டி 97.50, சி.என்.எக்ஸ்.100- 16.80, சி.என்.எக்ஸ். டிப்டி 65.10, சி.என்.எக்ஸ். 500- 14.55, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 28.70, மிட் கேப் 50- 16.70 புள்ளிகள் குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. மட்டும் 09 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil