Newsworld Finance Market 0809 08 1080908054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 461- நிஃப்டி 130 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி மும்பை
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (16:36 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த எண்கள், எவ்வித பின்னடைவும் இல்லாமல், இறுதிவரை உயர்ந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 461.14 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,944.97 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 130 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4482.30 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1665 பங்குகளின் விலை அதிகரித்தது. 1034 பங்குகளின் விலை குறைந்தது. 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 66.17, சுமால் கேப் 77.55, பி.எஸ்.இ 100- 137 புள்ளி அதிகரித்தது.

பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை 2.18%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.02%, நுகர்வோர் பொருட்கள் 3.70%, வங்கி 4.06%, ரியல் எஸ்டேட் 3.17%, ஆட்டோ 1.73%, தகவல் தொழில் நுட்பம் 2.28%, மின்உற்பத்தி 3.36%, தொழில்நுட்பம் 2.20%, உலோக உற்பத்தி 1.73% அதிகரித்தது.

தேசிபங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 134, சி.என்.எக்ஸ். ஐ.டி 84.45, பாங்க் நிஃப்டி 250.25, சி.என்.எக்ஸ்.100- 117.65, சி.என்.எக்ஸ். டிப்டி 141.50, சி.என்.எக்ஸ் 500- 85.70, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 50.90, மிட் கேப் 50- 23.40 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil