Publish Date: Thu, 04 Sep 2008 (12:02 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (12:01 IST)
தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ.8,688க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை 10 கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.168 சரிந்து 8,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையிலும் சில மாதங்களாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,725 (நேற்று முன்தினம் ரூ.11,815)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,688 (ரூ.8,760)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,086 (ரூ.1,095)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,900 (ரூ.20,215)
வெள்ளி 10 கிராம் ரூ.213 (ரூ.116.50)
வெள்ளி 1 கிராம் ரூ.21.3 (ரூ.11.6)
Webdunia
Publish Date: Thu, 04 Sep 2008 (12:02 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (12:01 IST)