Newsworld Finance Market 0809 01 1080901047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 66-நிஃப்டி 11.35 புள்ளி சரிவு!

Advertiesment
மும்பை
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:02 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், மாலை வர்த்தகம் முடியும் வரை குறைந்தன. மதியம் 2.30 மணிக்கு பிறகு சிறிது அதிகரித்தன. ஆனால் இறுதியில் முந்தைய நிலையை கூட எட்ட முடியவில்லை.


இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 66.03 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,498.51 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,348.65 ஆக குறைந்தது.

ஐரோப்பாவில் பெல்ஜியம் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 28.30 புள்ளிகள் குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1329 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,255 பங்குகளின் விலை குறைந்தது, 196 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 0.31, சுமால் கேப் பிரிவு 0.25, பி.எஸ்.இ. 100- 26.81, பி.எஸ்.இ. 200- 5.17, பி.எஸ்.இ.-500 14.39 புள்ளிகள் குறைந்தது.

பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை 0.31%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.30%, நுகர்வோர் பொருட்கள் 0.23%, வங்கி 0.17%, ரியல் எஸ்டேட் 0.09% அளவிற்கு அதிகரித்தன.

ஆட்டோ 0.30%, தகவல் தொழில் நுட்பம் 0.32%, மின்உற்பத்தி 0.44%, தொழில்நுட்பம் 0.89%, உலோக உற்பத்தி 1.08% அளவிற்குக் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 18.30, சி.என்.எக்ஸ்.100- 11.60, சி.என்.எக்ஸ். டிப்டி 11.60, சி.என்.எக்ஸ் 500- 07.45 புள்ளிகள் குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி 07.10, பாங்க் நிஃப்டி 26.80, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 19.20, மிட் கேப் 50- 05.80 புள்ளிகள் அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil