Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 516 – நிஃப்டி 146 புள்ளி உயர்வு!

சென்செக்ஸ் 516 – நிஃப்டி 146 புள்ளி உயர்வு!
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (16:57 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், மாலை வர்த்தகம் முடியும் வரை எவ்வித பின்னடைவும் இல்லாமல் அதிகரித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 516.19 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,564.53 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 146 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4360.00 ஆக உயர்ந்தது.

ஐரோப்பாவில் ஜெர்மனி தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மாலை 4.46 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 14.80 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1851 பங்குகளின் விலை அதிகரித்தது. 790 பங்குகளின் விலை குறைந்தது. 101 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று நடந்த வர்த்தகத்தில் எல்லா துறைகளின் பங்கு விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 133.44 சுமால் கேப் பிரிவு 109.34 பி.எஸ்.இ 100- 258.91 பி.எஸ்.இ 200- 58.27 பி.எஸ்.இ-500 177.35 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 256.55, சி.என்.எக்ஸ். ஐ.டி 119.90, பாங்க் நிஃப்டி 380.90, சி.என்.எக்ஸ்.100- 140.80, சி.என்.எக்ஸ். டிப்டி 111.20, சி.என்.எக்ஸ் 500- 112.125, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 152.50, மிட் கேப் 50- 73.90 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் எஸ்.பி.ஐ 7.22%, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.88%, பாரத் பெட்ரோலியம் 6.49% ரிலையன்ஸ் இன்ப்ரா 6.30% ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 6.22% அதிகரித்தது.

கேரின் மட்டும் 0.52% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil