Newsworld Finance Market 0808 29 1080829011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை‌யி‌ல் உயர்வு!

Advertiesment
தேசிய
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (11:08 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

சென்ற நான்கு நாட்களாக சரிந்து வந்த பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்றுடன் முன்பேர சந்தை ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அத்துடன் பணவீக்கம் குறைந்திருப்பதாக வந்துள்ள தகவல், அந்நிய நாடுகளில் உயர்வு ஆகிய காரணங்களினால், இந்திய பங்குச் சந்தை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.38 மணியளவில் 1407 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 428 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 45 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.40 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 322.89 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,371.23 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4304.90 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 88.64, சுமால் கேப் 79.83, பி.எஸ்.இ. 500- 113.22 புள்ளி அதிகரித்தது.

இன்று காலை நடந்த வர்த்தகத்தில் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.3,305.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,493.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.187.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,260.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.869.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.390.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 5,091.50 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக‌ஸ்‌ட் 28 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.68,857.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.47,8975.97 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 73.10 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 212.67, நாஸ்டாக் 29.18 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 33.26, சீனாவின் சாங்காய் காம்போசிட் 34.49, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 32.34, ஜப்பானின் நிக்கி 276.73 ஹாங்காங்கின் ஹாங்செங் 390.09, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 0.66, தைவான் வெயிட் 15.86 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil