Newsworld Finance Market 0808 28 1080828048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 248, நிஃப்டி 78 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் 248
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:51 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து குறைந்தன. மதியம் 2.25க்குப் பிறகு அதிக அளவு சரிய துவங்கியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 248.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,048.34 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 78.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4214.10 ஆக குறைந்தது.

ஐரோப்பாவில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மாலை 4.40 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 10.10 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 898 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,721 பங்குகளின் விலை குறைந்தது, 97 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று நடந்த வர்த்தகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள், பொதுத்துறை, உலோக உற்பத்தி, வங்கி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி ஆகிய துறைகளின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 77.58, சுமால் கேப் பிரிவு 77.61, பி.எஸ்.இ 100- 116.53, பி.எஸ்.இ 200- 27.14, பி.எஸ்.இ.-500 83.59 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 58.85, சி.என்.எக்ஸ். ஐ.டி 71 பாங்க் நிஃப்டி 102.40, சி.என்.எக்ஸ்.100- 58.90, சி.என்.எக்ஸ். டிப்டி 59.50, சி.என்.எக்ஸ் 500- 58.45, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 86.45, மிட் கேப் 50- 39.25 புள்ளி குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் கேரின் 2.23%, சுல்ஜான் 1.91%, ஹீரோ ஹோன்டா 1.45% மாருதி 0.51% சத்யம் கம்ப்யூட்டர் 0.44% அதிகரித்தது.

ஹின்டால்கோ 6.44%, நேஷனல் அலுமினியம் 5.79%, பாரத் பெட்ரோலியம் 4.76%, டாடா கம்யூனிகேஷன்ஸ் 4.51%, டாக்டர் ரெட்டி 3.87% புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil