Newsworld Finance Market 0808 27 1080827060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 185 – நிஃப்டி 45 புள்ளி சரிவு!

Advertiesment
மும்பை
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:50 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்களகுறைந்தன. மதியம் 2.20 க்கு பிறகு அதிக அளவு சரிய துவங்கியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 185.43 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,296.79 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4292.10 ஆக குறைந்தது.

ஐரோப்பாவில் மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. மாலை 4.30 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 7.40 புள்ளி குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1021 பங்குகளின் விலை அதிகரித்தது. 1583 பங்குகளின் விலை குறைந்தது. 103 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை

இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருள், பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 58.34, சுமால் கேப் பிரிவு 52.71, பி.எஸ்.இ 100- 82.60, பி.எஸ்.இ 200- 19.56, பி.எஸ்.இ-500 59.18 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 47.45, சி.என்.எக்ஸ். ஐ.டி 19.20, பாங்க் நிஃப்டி 19.65, சி.என்.எக்ஸ்.100- 42.75, சி.என்.எக்ஸ். டிப்டி 15.65, சி.என்.எக்ஸ் 500- 33.65, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 35.35, மிட் கேப் 50- 17.80 புள்ளி குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் டாக்டர் ரெட்டி 2.79%, ஹின்டால்கோ 2.65%, செயில் 1.54% ஹிரோ ஹோன்டா 1.36% கெயில் 0.98% அதிகரித்தது.

டி.எல்.எப் 3.86%, ரிலையன்ஸ் இன்ப்ராக்சர் 3.61%, எஸ்,பி.ஐ 2.90%, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 2.49%, யூனிடெக் 2.34% புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil