Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை‌யி‌ல் சரிவு!

Advertiesment
பங்குச் சந்தை‌யி‌ல் சரிவு!
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (10:49 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் பத்தாவது நிமிடத்திலேயே சரிந்தன.

காலை 10.06 மணியளவில் சென்செக்ஸ் 24.43, நிஃப்டி 5.60 புள்ளி குறைந்தது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று 1 பீப்பாய் 116 டாலராக அதிகரித்தது.

முன்பேர சந்தையில் ஆகஸ்ட் மாத டிரிவ்டிவின் நாளை முடிவடைகிறது. இத்துடன் இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.

இ‌ன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நண்பகலுக்கு பிறகு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

காலையில் வாகன உற்பத்தி, உலோக உற்பத்தி பிரிவு சிறிது அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.32 மணியளவில் 913 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 760 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 70 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 34.97 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,447.25 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4329.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 3.61, சுமால் கேப் 11.27 புள்ளி அதிகரித்தது. பி.எஸ்.இ. 500- 4.69 புள்ளி குறைந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,418.91 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,990.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.572.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.764.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.487.97 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.276.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,871.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக‌ஸ்‌ட் 26 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.68,637.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 47,342.08 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று பிரிட்டன் தவிர எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 34.90 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 26.62, எஸ் அண்ட் பி 4.67, புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 3.62 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் குறைந்தது. மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 6.57, ஜப்பானின் நிக்கி 21.44, சீனாவின் சாங்காய் காம்போசிட் 29.77 புள்ளி குறைந்தது.

ஹாங்காங்கின் ஹாங்செங் 149.39, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 1.93, தைவான் வெயிட் 114.82, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 9.05 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil