Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 32 புள்ளி உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 32 புள்ளி உயர்வுடன் நிறைவு!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:41 IST)
மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவின் போது 32 புள்ளிகள் உயர்ந்து 14,482 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை- நிப்ஃடி குறியீடு இரண்டு புள்ளிகள் அதிகரித்து 4,337.5 ஆக இருந்தது.

பங்குவர்த்தம் இன்று துவங்கிய போது 212 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 14,286 புள்ளிகள் வரை சரிந்தது. நண்பகல் 12 மணிக்கு பின்னரும் சரிவுப் பாதையிலேயே பயணித்த சென்செக்ஸ், பிற்பகல் 3 மணியளவில் சரிவில் இருந்து மீண்டும் உயர்வைச் சந்தித்தது.

ஒரு கட்டத்தில் 14,495 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 32 புள்ளி மட்டும் உயர்ந்து 14,482 ஆக நிலைப்பெற்றது. வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விற்பனையில் ஏற்பட்ட உயர்வே சென்செக்ஸ் உயர்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்கப்பட்ட 2,692 நிறுவனப் பங்குகளில், 1,389 பங்குகள் விலை உயர்ந்துள்ளன. 1,199 நிறுவனப் பங்குகள் விலை சரிந்தும், 104 நிறுவனங்கள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்குகள் 4% உயர்ந்து ரூ.1,255 ஆகவும், ஐசிஐசிஐ வங்கி 1.7% உயர்ந்து ரூ.667 ஆகவும், சத்யம் பங்குகள் 3% உயர்ந்து ரூ.406 ஆகவும், விப்ரோ பங்குகள் 2 ‌விழு‌க்காடு உயர்ந்து ரூ.429 ஆகவும், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 1.8 ‌விழு‌க்காடு உயர்ந்து ரூ.832 ஆகவும் இருந்தன.

எனினும், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 2.3 ‌விழு‌க்காடு சரிந்து ரூ.2,180 ஆகவும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.4 ‌விழு‌க்காடு சரிந்து ரூ578 ஆகவும் விலை சரிந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil