Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை பிற்பகல் நிலவரம்!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை பங்கு வர்த்தகம் சரிவு
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (15:00 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று பிற்பகல்வாக்கில் 81 புள்ளிகள் மட்டுமே குறைந்து 14,368.37 ஆக இருந்தது.

காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் 130 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், நண்பகலுக்குப் பிறகு சற்று உயரத் தொடங்கியது.

எனவே இன்றைய சந்தை நிறைவடையும் போது, பெரிய அளவில் இறங்குமுகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் தலா 3 விழுக்காடு அளவுக்கு சரிந்து முறையே ரூ. 155 ஆகவும், ரூ. 2,164 ஆகவும் இருந்தது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2 விழுக்காடு குறைந்து ரூ. 552-க்கு விற்கப்பட்டது. டாடா ஸ்டீல் பங்குகள் 1.8 விழுக்காடு சரிந்து ரூ. 575 ஆக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil