Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்!

சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (10:50 IST)
மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்று சரிவுடன் துவங்கியுள்ளது. முற்பகல் 10.39 மணியளவில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 14,346 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை- நிஃப்டி குறியீடு 34 புள்ளிகள் குறைந்து 4,301 ஆக சரிந்தது.

காலபங்குவர்த்தம் துவங்கிய போது 112 புள்ளிகள் சரிந்து 14,338 ஆக குறைந்த சென்செக்ஸ் குறியீடு, அடுத்த சில நிமிடங்களில் 14,300 புள்ளிகள் வரை சரிந்தது.

முன்னதாக நேற்று மாலை சந்தை நிறைவடைந்த போது 49 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிறைவடைந்த மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்குவர்த்தகம் துவங்கியதுமே புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர்.

ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் சந்தைக் குறியீடு சரிந்ததன் எதிரொலியாகவே இந்தியப் பங்குச் சந்தைகளிலும் சரிவு நிலவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் பங்குகள் 2.6% சரிந்து ரூ.2,172 ஆகவும், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 1.7% சரிந்து ரூ.645 ஆகவும், டி.எல்.எஃப் மற்றும் மஹிந்த்ரா&மஹிந்த்ரா நிறுவனப் பங்குகள் 1.5% சரிந்து முறையே ரூ.487 மற்றும் ரூ.555 ஆக இருந்தன.

எனினும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள சத்யம் பங்குகள் 2% அதிகரித்து ரூ.402 ஆகவும், விப்ரோ பங்குகள் 1.6% உயர்ந்து ரூ.426 ஆகவும், டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்து முறையே ரூ.826 மற்றும் ரூ.1,719 ஆக விலை உயர்ந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil