மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் துவக்கத்திலேயே 242 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.
தொடர்ந்து சற்றே குறைந்த போதிலும் 11 மணியளவில் 233 புள்ளிகள் உயர்வுடன் 14,635.15 ஆக இருந்தது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளும், டிஎல்எஃப் பங்குகளும் தலா 3.3 விழுக்காடு உயர்ந்து முறையே ரூ. 666 ஆகவும், ரூ. 500 ஆகவும் இருந்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்ப்ராடிரக்சர் பங்குகளைப் பொருத்தவரை தலா 3 விழுக்காடு அளவுக்கு உயந்து முறையே ரூ. 1,230 மற்றும் ரூ. 1,007 ஆகவும் இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி, எல் அண்ட் டி, சத்யம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராஸிம் மற்றும் ஏசிசி பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வை எதிர்கொண்டன.
தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு 52 புள்ளிகள் உயர்ந்து 4,379.45 ஆக இருந்து வருகிறது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்றைய பங்கு வர்த்தகத்தில் சாதகமான நிலை காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்,.