மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சரிந்த குறியீட்டு எண்கள், மதியம் 3 மணிக்கு பிறகு அதிகரித்தது. ஆனால் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 157.76 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,401.49 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 43.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,327.45 ஆக உயர்ந்தது.
ஐரோப்பாவில் பிரிட்டன் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மாலை 4.55 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 56.90 புள்ளி அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,209 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,414 பங்குகளின் விலை குறைந்தது, 102 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை
இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, வங்கி, நுகர்வோர் பொருள், பொதுத்துறை, வாகன உற்பத்தி பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 19.39, பி.எஸ்.இ 100- 69.78, பி.எஸ்.இ 200- 15.10, பி.எஸ்.இ-500 43.36 புள்ளி அதிகரித்தது.
சுமால் கேப் பிரிவு 11.17 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 59.75, சி.என்.எக்ஸ். ஐ.டி 12.05, பாங்க் நிஃப்டி 64.50, சி.என்.எக்ஸ்.100- 40.65, சி.என்.எக்ஸ். டிப்டி 48.85, சி.என்.எக்ஸ் 500- 25.75, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 07.10, மிட் கேப் 50- 02.15 புள்ளி அதிகரித்தது.
நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஹின்டால்கோ 4.83%, ஸ்டெர்லைட் 4.43%, செயில் 4.12% ஹிந்துஸ்தான் யூனிலிவர் 3.86% அதிகரித்தது.
சத்யம் கம்ப்யூட்டர் 3.21%, பாரத் பெட்ரோலியம் 2.42%, கிரேசம் 1.71%, என்.டி.பி.சி 1.70%, டாக்டர் ரெட்டி 1.30 புள்ளி குறைந்தது.