அன்னிய செலாவணி சந்தையில் இன்று காலை டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.53/54 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.43.51-43.52.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை விற்பனை செய்தது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.43.36/43.37 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 15 பைசா குறைவு.
மற்ற நாட்டு அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்தது. அத்துடன் வங்கிகளும் டாலரை விற்பனை செய்தன. இதனால் இங்கு இதன் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.