Newsworld Finance Market 0808 20 1080820005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் உயர்வு

Advertiesment
பங்குச் சந்தைகளில் உயர்வு
, புதன், 20 ஆகஸ்ட் 2008 (10:50 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 115.87, நிஃப்டி 31.55 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலை மாறும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 1214 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 530 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 55 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 77.34 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,621.07 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.18 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4395.43 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 47.21, சுமால் கேப் 45.43, பி.எஸ்.இ. 500- 39.17 புள்ளி அதிகரித்தது.

ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், பிரிவு பங்குகள் அதிகரித்தன.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,1416.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,863.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.716.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.500.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.486.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இவை நேற்று ரூ.128.91 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 19 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,130.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.19 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.66,896.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 45,968.02 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 129.80 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 130.84, நாஸ்டாக் 32.62, எஸ்&பி 500-11.91 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பிலிப்பைன்ஸ் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 138.17, ஜப்பானின் நிக்கி 22.71, ஹாங்காங்கின் ஹாங்செங் 319.10, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 13.51, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 3.53, தைவானின் தைவான் வெயிட் 51.26, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் மட்டும் 15.60 புள்ளி அதிகரித்தது.

பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் மட்டும் 9.54 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil