மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.10ம், பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.175ம் குறைந்தது.
நியூ யார்க் தங்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 799.65/801.05 ஆக இருந்தது 792.35/794.35 டாலர்களாக குறைந்தது
இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.07/13.13 டாலரில் இருந்தது, 12.99/13.05 டாலராகக் குறைந்தது.
தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 800 டாலருக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,475
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,400
பார் வெள்ளி கிலோ : ரூ.20,495