Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 369 , நிஃப்டி 98 புள்ளி சரிவு!

சென்செக்ஸ் 369 ,  நிஃப்டி 98 புள்ளி சரிவு!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:34 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்றும் நேற்றைய மாதிரியே தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற அனைத்து பிரிவு பங்கு விலைகளும் குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 368.94 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,724.18 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 98.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,430.70 ஆக சரிந்தது.

ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 57.70 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 811 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,849 பங்குகளின் விலை குறைந்தது, 70 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 105.95, சுமால் கேப் பிரிவு 119.33, பி.எஸ்.இ 100- 198.83 பி.எஸ்.இ 200- 45.38 பி.எஸ்.இ-500 138.85 புள்ளிகள் குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி, பொதுத்துறை, பெட்ரோலிய நிறுவனங்கள் குறியீட்டு எண் அதிக அளவு குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 266.20 பாங்க் நிஃப்டி 340.70 சி.என்.எக்ஸ்.100- 102.55 சி.என்.எக்ஸ். டிப்டி 96.15 சி.என்.எக்ஸ். 500- 86.40 சி.என்.எக்ஸ்.மிட் கேப் 111.45 மிட் கேப் 50- 51.50 புள்ளிகள் குறைந்தது. சி.என்.எக்ஸ். ஐ.டி. மட்டும் 52.55 புள்ளிகள் அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசியஸ் 4.15%, ஹெச்.சி.எல் டெக்னாலஜி 2.43% கேரின் 1.91% சத்யம் கம்யூட்டர்ஸ் 1.62%, டாடா பவர் 1.58% சன் பார்மா 1.06% உயர்ந்தது.

டி.எல்.எப். 8.80%, ரிலையன்ஸ் இன்ப்ராக்சர் 7.51%, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.86%, யூனிடெக் 6.77%, ஐ.சி.ஐ.சியஐ வங்கி 5.25% விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil