Newsworld Finance Market 0808 13 1080813058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 119 – நிஃப்டி 23 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி மும்பை
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (16:59 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது. மதியம் 12 மணியளவில் அதிகரித்த குறியீட்டு எண்கள் மீண்டும் சரிய துவங்கின.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 119.01 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,093,12 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,529.05 ஆக சரிந்தது.

ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 33.30 புள்ளி குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,238 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,420 பங்குகளின் விலை குறைந்தது, 91 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 6.16 பி.எஸ்.இ 100- 45.74 பி.எஸ்.இ 200- 10.21 பி.எஸ்.இ-500 28.09 புள்ளிகள் குறைந்தது. சுமால் கேப் பிரிவு மட்டும் 9.35 புள்ளி அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்போர் பொருட்கள் உற்பத்தி குறியீட்டு எண் அதிக அளவு குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 73.35, பாங்க் நிஃப்டி 120.05, சி.என்.எக்ஸ்.100- 25.10, சி.என்.எக்ஸ். டிப்டி 46.30, சி.என்.எக்ஸ் 500- 18.40, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 12.80, மிட் கேப் 50- 17.55 புள்ளிகள் குறைந்தது. சி.என்.எக்ஸ். ஐ.டி. மட்டும் 34.75 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரிஸ் 3.02%, சிப்லா 2.88% ஏ.பி.பி 2.51% ஜூ டெலிபிலிம்ஸ் 2.01%, கேரின் 1.56% இன்போசியஸ் 1.37% உயர்ந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 4.04%, ஹெச்.டி.ஃப்.சி வங்கி 3.77%, டி.எல்.ஃப் 3.32%, ரிலையன்ஸ் இன்ப்ரா 2.71%, ஹெச்.டி.ஃப்.சி 2.43% விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil