தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்ததகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் சில நிமிடங்களிலேயை குறைந்தன.
இந்த நிதி ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்கான தொழில் துறை வளர்ச்சி பற்றிய புள்ளி விபரத்தை மத்திய அரசு இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட்டது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையின் எல்லா பிரிவுகளும் சரிவை சந்தித்தன.
இதனால் பங்குச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
மதியம் 1.25 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 343.64 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 15,160.64 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.80 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 4539.60 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 55.61, சுமால் கேப் 67.05 பி.எஸ்.இ. 500- 109.29 புள்ளிகள் குறைந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மதியம் 1.25 நிலவரப்படி 859 பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது, 1,633 பங்குகளின் விலை குறைந்து இருந்தது, 75 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.