அன்னியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 18 பைசா குறைந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.15/16 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.33/34 ஆக இருந்தது.
சர்வதேச பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவே, டாலர் விலை சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.