கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 உயர்ந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று பவுன் ரூ.8,744க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,264க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆடி முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன. ஆடி மாதத்தில் திருமணம் எதுவும் நடைபெறாததால் ஆவணி மாதத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பவுன் 10,000 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் நகைகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது பவுன் ரூ.8000க்கு வந்துள்ளதால் போட்டி போட்டுக் கொண்டு நகைகளை மக்கள் வாங்கி வருகின்றனர். இதனால் கடைகளில் திருவிழாக்கள் போல் கூட்டம் கூடுகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 10 கிராமுக்கு 19 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,150 (நேற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,264 (ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,033 (ரூ.1,093)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,055 (ரூ.21,830)
வெள்ளி 10 கிராம் ரூ.214.50 (ரூ.233)
வெள்ளி 1 கிராம் ரூ.21.4 (ரூ.23.3)