தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் சில நிமிடங்களிலேயே குறைந்தன.
சென்செக்ஸ் 73, நிஃப்டி 8 புள்ளி உயர்வுடன் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே குறைந்தது.
அமெரிக்கா, ஐரோப்பா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.
இன்று காலையில் ஆசிய நாடுகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்தது. அந்நிய, முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கினார்கள். இன்று இலாப கணக்கு பார்க்கலாம். இதனால் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக மாற்றத்துடன் இருக்கும். நண்பகலுக்கு பிறகே யதார்த்த நிலைமை தெரியும்.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 889 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 866 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 55 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 297.02 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,464.02 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 76.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4605.80 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 297.02, சுமால் கேப் 110.80 பி.எஸ்.இ. 500- 109.30 புள்ளி அதிகரித்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.2,930.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,650.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை நேற்று ரூ.280.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன..
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,162.37 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.657.07 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை வெள்ளிக் கிழமை ரூ.505.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 238.19 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63.527.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 52.60 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 48.03, நாஸ்டாக் 25.85, எஸ்&பி 500-9.00 புள்ளி அதிகரித்தது.
இன்று ஆசிய நாடுகளில் இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
ஜப்பானின் நிக்கி 41.88, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 31.92, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 12.66, தைவானின் தைவான் வெயிட் 6.85 புள்ளி குறைந்து இருந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.63, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 13.38, ஹாங்காங்கின் ஹாங்செங் 377.54, சீனாவின் சாங்காய் காம்போசிட் 5.33 புள்ளி அதிகரித்தது.