அன்னியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 12 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.06/07 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.41.94/95 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.