Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை‌யி‌ல் உயர்வு!

பங்குச் சந்தை‌யி‌ல் உயர்வு!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (10:45 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌‌த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 265.51, நிஃப்டி 72 புள்ளி அதிகரித்து இருந்தது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நியூயார்க் முன்பேர சந்தையில் வெள்ளிக் கிழமை 1 பீப்பாய் 115 டாலர் என்ற அளவிற்கு விலை குறைந்தது.

அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

இன்று காலையில் ஆசிய நாடுகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரிக்கும் என தெரிகிறது. வங்கி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி உட்பட எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1478 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 360 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 28 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 297.02 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,464.02 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 76.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4605.80 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 297.02, சுமால் கேப் 110.80 பி.எஸ்.இ. 500- 109.30 புள்ளி அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் ரூ.1,947.80 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,090.02 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை வெள்ளிக் கிழமை ரூ.142.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.846.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.830.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை வெள்ளிக் கிழமை ரூ.16.29 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 42.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.8 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63.808.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை இத்தாலி தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 11.70 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 302.89 நாஸ்டாக் 58.37 எஸ்&பி 500-30.25 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளில் சீனா, இந்தோனேஷியா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

ஜப்பானின் நிக்கி 280.82 தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 21.80, தைவானின் தைவான் வெயிட் 130.68, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 32.15, ஹாங்காங்கின் ஹாங்செங் 323.27 புள்ளி அதிகரித்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.47, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 31.53 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil