Newsworld Finance Market 0808 07 1080807051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 44 - நிஃப்டி 6 புள்ளி உயர்வு!

Advertiesment
மும்பை
, வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:47 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் பிறகு குறைய துவங்கின. நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 43.71 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,117.25 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4523.85 ஆக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும்,சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 17.40 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1406 பங்குகளின் விலை அதிகரித்தது. 1284 பங்குகளின் விலை குறைந்தது. 95 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 26.18 சுமால் கேப் 22.86 பி.எஸ்.இ 100- 21.80 பி.எஸ்.இ 200-5.21 பி.எஸ்.இ-500 17.57 புள்ளி அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் பொதுத்துறை, பெட்ரோலிய நிறுவனங்கள், மின் உற்பத்தி, நுகர்வோர் பொருள் உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 22.65, சி.என்.எக்ஸ். ஐ.டி 10.80, பாங்க் நிஃப்டி 34.95, சி.என்.எக்ஸ்.100- 7, சி.என்.எக்ஸ். டிப்டி 10.35, சி.என்.எக்ஸ். 500- 7.10, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 10.25, மிட் கேப் 50- 14.25 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரிஸ் 4.66%, டாக்டர் ரெட்டி 4.61%, டாடா மோட்டார்ஸ் 4.00%, ஹெச்.டி.எப்.சி 3.61%, கேரின் இந்தியா 3.56%, மாருதி 3.07% அதிகரித்தது.

பி.ஹெச்.இ.எல் 3.10%, பார்தி ஏர்டெல் 2.31%, ஹெச்.சி.எல் டெக் 2.30%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.21% ஜூ டெலிபிலிம்ஸ் 2.02% விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil