Newsworld Finance Market 0808 07 1080807008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை‌யி‌ல் உயர்வு!

Advertiesment
தேசிய
, வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌த்தகம் தொடங்கும் போது அதிக மாற்றத்துடன் இருந்த குறியீட்டு எண்கள் 10.30 மணிக்கு பிறகு அதிகரித்தன.

சென்செக்ஸ் ஒரு நிலையில் 15,000 க்கும் குறைந்தது. 10.30 மணிக்கு பிறகு அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11.10 மணி நிலவரப்படி 1296 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 848 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 71 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 116.69 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,190.23 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.25 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4544.20 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 50.74 சுமால் கேப் 46.77 பி.எஸ்.இ. 500- 45.66 புள்ளி அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.4,925.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,109.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.1,815.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,118.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,923.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.804.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 323.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63.443.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா மற்ற பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 31.60 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 40.30 நாஸ்டாக் 28.54 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சிலவற்றில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது.

ஜப்பானின் நிக்கி 177.44 தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 20.19 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 58.60 தைவானின் தைவான் வெயிட் 9.94, சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.47 புள்ளி குறைந்தது. ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங் 129.76, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 1.88 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil