Newsworld Finance Market 0808 05 1080805048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 383 - நிஃப்டி 107 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி மும்பை
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (17:05 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நண்பகல் 1 மணிக்கு பிறகு தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 383.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,961.07 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 107.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4502.85 ஆக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஆஸ்திரியா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 91.20 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1779 பங்குகளின் விலை அதிகரித்தது. 923 பங்குகளின் விலை குறைந்தது. 65 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 101.16 சுமால் கேப் 89.45 பி.எஸ்.இ100- 192.94 பி.எஸ்.இ 200-43.29 பி.எஸ்.இ-500 132.67 புள்ளி அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி, மின் உற்பத்தி, பொதுத்துறை, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 258 சி.என்.எக்ஸ். ஐ.டி 76.45, பாங்க் நிஃப்டி 379.30, சி.என்.எக்ஸ்.100- 109.50 சி.என்.எக்ஸ். டிப்டி 103.05 சி.என்.எக்ஸ். 500- 102.75 சி.என்.எக்ஸ்.மிட் கேப் 94.95 மிட் கேப் 50- 31.30 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.சி.எல் டெக் 9.19%, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 8.38% யூனிடெக் 7.64% டி.எல்.எப் 7.27%, மாருதி 7.21% ஹெச்.டி.எப்.சி வங்கி 6.83% விலை அதிகரித்து.

எஸ்.டி.இ.ஆர் 6.86%, கேரின் 4.14%, டாடா ஸ்டீல் 2.26%, டாடா பவர் 1.57% ரான்பாக்ஸி 1.13% விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil