அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.48/49 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.28/29 ஆக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிந்ததே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.